முகிலன் காணாமல்போன வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
ஸ்டெர்லைட் , கூடம்குளம் மற்றும் மணல் கடத்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த சமூக ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான முக்கிய ஆவணங்களை பத்திரிக்கையாளர்களின் முன்பு வெளியிட்டார். அதன்பின் சொந்த ஊர் திரும்ப எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலேறிய முகிலன் ஊர் போய் சேரவில்லை.
முகிலன் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடியும் இதுவரை அவர் எங்கிருக்கின்றார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை
இந்த நிலையில் முகிலன் காணாமல்போன வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாறியுள்ள்து. இதுகுறித்த உத்தரவில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சற்றுமுன் கையெழுத்திட்டுள்ளார்.
முகிலன் காணாமல் போனது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.