திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (13:21 IST)

கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் கூறியது உண்மைதான்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ்நாட்டில் கோவில் சொத்துக்கள்  முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் கூறியது உண்மைதான் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
 தமிழகத்தில் ஆவணங்களின் அடிப்படையில் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், 5 ஆயிரம் ஏக்கர் மட்டுமே இதுவரை அரசு கையகப்படுத்தி இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கிறார். எஞ்சிய இடங்கள் தற்போது பயன்பாட்டில் இருப்பதை ஏன் அரசு கண்டுகொள்ளவில்லை.
 
தமிழ்நாட்டில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி ஒரு கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அது உண்மை. இதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுப்பாரானால், நான் விவாதிக்க தயாராக உள்ளேன். முதல்வர் ஸ்டாலின் சொல்வது பொய். பிரதமர் மோடி கூறுவது பொய் என்றால், முதல்வர் ஸ்டாலின் அதற்கு தகுந்த ஆவண, ஆதாரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும். 
 
தொடர்ந்து கோயில் நிலங்களை மட்டும் கையகப்படுத்தி, அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்தும் அரசு, ஏன் மற்ற மதங்களின் நிலத்தை கையகப்படுத்தவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Mahendran