தொடர்புடைய செய்திகள்
- பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. வழக்கம் போல் தேர்ச்சி விகிதத்தில் சாதனை செய்த மாணவிகள்..!
- சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்..!
- நாளை பிளஸ் 2 ரிசல்ட்.. நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம்..!
- நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்?
- சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்..!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 97.42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளது. 97.25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது. மேலும் 90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது
பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்கள் இதோ:
இயற்பியல் - 98.48%
வேதியியல் - 99.14%
உயிரியல் - 99.35%
கணிதம் - 98.57%
தாவரவியல் - 98.86%
விலங்கியல் - 99.04%
கணினி அறிவியல் - 99.80%
வணிகவியல் - 97.77%
கணக்குப் பதிவியல் - 96.61%
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
