1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Plus two maths exam is very hard says students

கடினமாக இருந்தது கணித தேர்வு: பிளஸ் 2 மாணவ மாணவிகள் அதிர்ச்சி..!

மதிப்பெண்
கடந்த சில நாட்களாக பிளஸ் டூ தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கணிதம் விலங்கியல் வணிகவியல் நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இன்ஜினியரிங் படிப்புக்கு முக்கிய பாடமான கணிதம் தேர்வு நேற்று நடந்த நிலையில் இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் கருத்து தெரிவித்திருந்தனர் 
 
சில வினாக்கள் ஆழமாக யோசித்து விடை அளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஒரு சில வினாக்கள் சாய்ஸ் ஆக கொடுக்கப்பட்ட இரண்டு வினாக்களுமே கடினமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே இந்த ஆண்டு பிளஸ் 2 கணித தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்ணும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நகராட்சிகளாக தரம் உயரும் 10 பேரூராட்சிகள்: முழு விபரங்கள்..!