திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:43 IST)

அடித்து மிதித்து விசாரிக்குறாங்க: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைதான இளைஞர் கதறல்!

arrest
அடித்து மிதித்து விசாரிக்குறாங்க: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைதான இளைஞர் கதறல்!
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைதான இளைஞர் ஒருவர் தன்னை போலீசார் அடித்து மிதித்து விசாரிக்கின்றனர் என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்டிபி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அபுதாகிர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்
 
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர் காவல் நிலையத்தில் ஜன்னலருகே வந்து தன்னை அடிக்கிறார்கள் மிதிக்கிறார்கள் என்று கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இதனை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வாகனத்தில் ஏற்ற போலீசார் முயன்றபோது வாகனத்தில் ஏற அடம்பிடித்து தாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து அவரை வாகனத்திற்குள் போலீசார் வலுக்கட்டாயமாக ஏற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது