கோவை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கைது!
கோவையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய புலனாய்வுத்துறை சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்பட ஒரு சில அமைப்புகளின் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்து 100 பேருக்கும் அதிகமானவர்களை கைது செய்தது
இதனை அடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இரண்டு பேரும் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் என்றும் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்