திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (08:04 IST)

இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்: ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை விவாதமா?

ministry
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூட இருப்பதை அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி விட்டன. 
 
இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடைசெய்வது, ஜெயலலிதா மரண அறிக்கை குறித்து விவாதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
 
தமிழக அமைச்சரவை கூட்டம் முடிவடைந்ததும் முக்கிய அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.