வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (06:43 IST)

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? இன்றைய உயர்வு எவ்வளவு?

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
இது குறித்து நேற்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மாற்று எரிபொருளை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறியதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டர் லிட்டர் ரூபாய் 91.68 என விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு என்பது 85.01 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது 
 
இன்று அதிகாலை முதல் இந்த விலை அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. பெட்ரோல் டீசல் விலை ரூ.100ஐ தொட்டுவிட்டால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள் என்பதும் அந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது