1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:41 IST)

ஈஸ்வரன் பட நடிகைக்கு சென்னையில் கோவில்! – ஷாக் ஆன நடிகை!

பிரபல நடிகை நிதி அகர்வாலுக்கு சென்னையில் அவரது ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ஜெயம் ரவியின் பூமி மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்தது மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். முன்னதாக தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள இவர் தற்போது தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நிதி அகர்வாலுக்கு சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த அவரது ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். நிதி அகர்வாலுக்கு சிலை வைத்துள்ள அவர்கள் சிலைக்கு பாலை பீய்ச்சியடித்து மரியாதை செய்தனர்.

இதுகுறித்து அறிந்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்த நிதி அகர்வால் இதுதான் எனக்கு கிடைத்த மிக சிறந்த காதலர் தின பரிசு என கூறியுள்ளார்.