இளையராஜாவின் ஸ்டுடியோவுக்குச் சென்று பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி

rajinikanth
Sinoj| Last Updated: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (19:07 IST)
 
 

இந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது புதிய ஸ்டுடியோவை திறந்துள்ளார்.  இந்த ஸ்டுடியோவுக்கு வருகை தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கான அறையில் இளையராஜா தனது படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில்  அவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர், அவருக்கு பிரசாத் ஸ்டுவியோவுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், வழக்கை திரும்ப பெற்றால் அனுமதிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ தெரிவித்ததால் வழக்கை திரும்ப பெற்றதால் அவருக்கு ஒருநாள் தியானம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது.
 
ஆனால், அங்குள்ள அவரது அறையிலிருந்த இளையராஜாவின் இசைக்கருவிகள் , விருதுகள் எல்லாம் வெளியே எடுத்துவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையெல்லாம் இளையராஜா ஒருலாரியில் எடுத்துச் சென்றார்.
 
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் பாலத்துக்கு அருகில் இருக்கும் எம் எம் தியேட்டரை வாங்கி அதை தனது புதிய ஸ்டுடியோவாக மாற்றியுள்ளார்.


இந்த ஸ்டுடியோவுக்கு இன்று வருகை தந்தை நடிகர் ரஜினிகாந்த், ஸ்டுடியோவை ஆர்வமுடன்  சுற்றிப்பார்த்து, ஸ்டுடியோவைப் பாராட்டியதுடன் , இளையராஜாவுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும், சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் , தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனக் கூறியபின் , பொதுவெளியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து ரஜினிகாந்த் கூறும்போது, கோயிலுக்குள் வந்ததுபோன்ற  உணர்வு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மற்றும் இளையராஜா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :