1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate increases

சற்று கூடியது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

தமிழகம்
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.35,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து, ரூ.4,468-க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
பாஸ்டேக் இல்லைனா இரு மடங்கு கட்டணம் வசூல்! – அதிர்ச்சியில் ஓட்டுனர்கள்!