முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி… கிலோ 1 ரூபாய்க்கு கேட்கும் வியாபாரிகள்!

Last Updated: செவ்வாய், 23 மார்ச் 2021 (12:57 IST)

முள்ளங்கி வரவு அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
பகுதிகளில் முள்ளங்கி விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது. இந்த முறை முள்ளங்கி விளைச்சல் நல்லபடியாக இருந்தும் அதற்கான விலை இல்லாததால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சந்தைகளில் முள்ளங்கி வரவு அதிகமாகியுள்ளதால் விவசாயிகளிடம் இருந்து கிலோ 1 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்பதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :