1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (14:33 IST)

பெட்ரோல், டீசல் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் வரி 300% அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி வசூல் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு. 

 
இதுதொடா்பான கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்கூர் மக்களவையில் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.
 
பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வரி வசூல் மூலமாக மத்திய அரசுக்கு கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.74,158 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் மட்டும் இந்த வகையிலான வரி வசூல் ரூ.2.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
 
கடந்த 2014-15-ஆம் நிதியாண்டின் மொத்த வருவாயில் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மீதான வரி வசூலின் பங்களிப்பு 5.4 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 12.2 சதவீதமாக உயா்ந்துள்ளது.
 
2014-ஆம் ஆண்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் மீது ரூ.3.56-ஆக இருந்த உற்பத்தி வரி தற்போது ரூ.32.90-ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று டீசல் மீதான கலால் வரியும் ரூ.3.56-லிருந்து ரூ.31.80-ஆக உயா்ந்துள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 
 
நரேந்திர மோதி அரசு மத்தியில் முதல் முறையாக பொறுப்பேற்ற போது 2014-15-இல் பெட்ரோல் மீதான கலால் வரி மூலமாக ரூ.29,279 கோடியும், டீசல் மீதான கலால் வரி மூலமாக ரூ.42,881 கோடியும் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைத்தது. இந்த நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் பலமுறை கலால் வரி உயா்த்தப்பட்டதன் விளைவாக தற்போது அந்த வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது.