1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் திடீர் மாற்றமா?

Petrol
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்றாலும் ஏற்கனவே உயர்த்தப்பட்ட அதிகப்படியான விலையை குறைக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியையும் குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இலங்கையில் இருந்து அகதிகளாக 6 பேர் இன்று தனுஷ்கோடி வருகை!