ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (09:44 IST)

ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்: பீட்டர் அல்போன்ஸ்

rahul
ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அறிவித்துள்ளார்
 
சமீபத்தில் எப்எம் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த பீட்டர் அல்போன்ஸ் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார்
 
ராகுல் காந்தி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் இடையிலான நட்பு வலுவாக இருப்பதாகவும் நாட்டின் நலன் கருதி அவரை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புவதாகவும் ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அந்த யாத்திரையை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தது மிகவும் சிறப்புக்குரியது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்