1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (12:35 IST)

ராகுல் காந்தி டீ-சர்ட் பஞ்சாயத்து: முற்றுபுள்ளி வைத்த கே.எஸ்.அழகிரி!

ராகுல் காந்தி அணிந்திருக்கின்ற டீ-சர்ட் திருப்பூரில் உள்ள கோல்டன் ஐஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என கே.எஸ்.அழகிரி விளக்கம்.
 
காங்கிரஸின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ மூன்றாவது நாளை நேற்று எட்டிய நிலையில், ராகுல் காந்தியின் டி-சர்ட் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.'பாரத் ஜோடோ யாத்திரை'யின் போது பணவீக்கம் பிரச்னையை எழுப்பி வரும் ராகுல் காந்தி  ரூ.41,257 மதிப்புள்ள டி-சர்ட் அணிந்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் காங்கிரஸைத் தாக்கியது பாஜக.
 
மறுபுறம் பாஜகவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்கள் அளித்த வரவேற்பை கண்டு மத்தியில் ஆளும் கட்சி பயப்படுவதாகக் கூறியது. இந்நிலையில் இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார் தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி. அவர் கூறியதாவது, 
ராகுல் காந்தி அணிந்திருக்கின்ற டீ-சர்ட் திருப்பூரில் உள்ள கோல்டன் ஐஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. மொத்தமாக 20,000ன்டீ-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டது. கட்சி தோழர்கள் அனைவரும் அந்த டீ-ஷர்ட் தான் அணிந்து உள்ளனர். தொண்டர்கள் அணிந்துள்ள டீ-சர்ட்களில் தலைவர்களின் படங்களை பொறிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் ராகுல் அணிவதற்காக நான்கு டீ சர்ட் படங்கள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டது. இதன் விலை ரூ.40,000-மோ ரூ. 4 லட்சமும் அல்ல. மோடி தான் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிகிறார். ராகுல் அல்ல என தெரிவித்துள்ளார்.