வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (18:57 IST)

ஊருக்கு செல்லும் மக்கள்; தொடங்கியது பெருங்களத்தூர் காமெடி!

Perungalathur
பொங்கலுக்காக சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ள நிலையில் பெருங்களத்தூர் காமெடிகள் வைரலாக தொடங்கியுள்ளன.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். சென்னையின் 6 இடங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதலாக மக்கள் சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக புறப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.

வழக்கமாக இதுபோன்று பொங்கல், தீபாவளி சமயங்களில் போக்குவரத்து நெரிசலால் பெருங்களத்தூர் பகுதியில் வாகனங்கள் கடக்க சில மணி நேரங்கள் ஆவது வழக்கம். தற்போதும் அவ்வாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை மையப்படுத்தி நெட்டிசன்கள் பலர் பெருங்களத்தூர் காமெடி மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலிலும் கலகலவென சிரிக்க வைக்கும் சில பெருங்களத்தூர் காமெடிகள் சில..
Memes
Memes
Memes
Memes
Memes