பத்திரப்பதிவு அலுவலகம் முன் தீக்குளித்த நபர் உயிரிழப்பு
மதுரை ஊமச்சிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் தின்னர் ஊற்றி தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தில் அடமானம் வைத்த 14 சென்ட் நிலத்தை மீட்க முடியாததால் சிவகங்கையைச் சேர்ந்த கனகவேலுக்கு மாதவன் விற்பனை செய்துள்ளார். அந்த 14 செண்ட் நிலத்தை கனகவேல் மற்றொருவருக்குஅதிக விலைக்கு விற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலத்தின் முந்தையை உரிமையாளர் மாதவன் தின்னர் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.