1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (15:22 IST)

மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தா.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மதுரை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவிக்கக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தற்போதைய மதுரை ஆதினம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
Edited by Siva