திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2023 (19:07 IST)

மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்.. போலீஸார் வழக்குப்பதிவு..!

மதுரையில் மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ராணுவ வீரர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை சோழவந்தனை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் விடுமுறைக்கு வீடு வந்துள்ளார். ஆனால் தனது மனைவி கார்த்திகா குழந்தையுடன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளதை அடுத்து அவர் மாமியார் வீடு சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

ஆனால் அவரது மனைவி வராததை அடுத்து அவரது வீட்டில் தகராறு செய்த சூர்யா பிரகாஷ்  குழந்தையையும் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து மனைவி அளித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்

சூரிய பிரகாஷ் தனது மனைவி வீட்டுக்கு செல்லும் போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 10 சவரன் நகை கேட்டு கணவர் மற்றும் மாமியார் மாமனார் கொடுமைப்படுத்தியதாகவும் கார்த்திகா புகார் அளித்துள்ளார்.

Edited by Siva