புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (11:21 IST)

பேரறிவாளனின் விடுதலை? உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும்  அந்த தீர்மானம் மீது தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று திபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் ஏழு பேரின் விடுதலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.