புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (08:38 IST)

சின்னம்மா விடுதலையில் சின்ன மாற்றம் !!

சசிகலா விடுதலையாகும் நேரத்தில் சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கர்நாட்க சிறைத்துறை அறிவித்துள்ளது. 

 
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால் இப்போது சசிகலா விடுதலை குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை ஆகிறார் என கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.