தொடர்புடைய செய்திகள்
- பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிப்பு
- தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!
- மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன் !
- பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவு: அப்பல்லோவில் அனுமதி!
- பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை தமிழக அரசே செய்யவேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி கோரிக்கை!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன்!
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை வசித்து வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பது தெரிந்தது. அவரை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த 25 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பேரறிவாளனுக்கு பலமுறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்று பேரறிவாளன் பரோலை மேலும் ஒருமாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வயிற்று வலி மற்றும் சிறுநீரக தொற்று ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இப்போது விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
