வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:18 IST)

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை அதிமுக ஆதரவு - ஈபிஎஸ்!

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுகவே காரணம் என செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேட்டி. 

 
நீட் தேர்வு பயத்தால் நேற்று சேலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் இன்று நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னர் திமுக - அதிமுக இடையே நடந்த விவாதத்தால் அதிமுகவினர் பேரவையை விட்டு வெளியேறினர். 
 
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பின்வருமாறு பேசினார். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி நீட் தேர்வை ரத்து செய்யாததால் மாணவர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். 
 
நீட் தேர்வு பிரச்னையில் அரசு தெளிவான முடிவை திமுக அரசு சொல்லவில்லை. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை. மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுகவே காரணம். ஆனால் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என தெரிவித்துள்ளார்.