1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (19:26 IST)

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கும்பலின் தலைவன் கைது..!

atm
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தனி படைகள் தீவிர விசாரணை செய்து வரும் நிலையில் இந்த கொள்ளை கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை பெயர்கள் ஆரிப் மற்றும் ஆசாத் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஹரியானாவில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று இரவு விமானம் மூலம் தமிழ்நாடு கொண்டு வரப்பட உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கை விசாரணை செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு தனிப்படை ஹரியானா சென்றது என்பதும் ஹரியானாவில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்தது.
 
Edited by Siva