ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (16:50 IST)

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

fisherman
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்  நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் அருகே உள்ள நம்பியார் நகர் மீன்வ கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனக்குச் சொந்தமான படகில் அவர் தன் ஊரைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுடன் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.

கோடியக்கரைக்கு அருகே இந்தியக் கடல் பரப்பில் இன்று அதிகாலையில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த  இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் இறங்கி, மீனவர்களைத் தாக்கத் தொடங்கினர்.

முருகனை அரிவாளால் அவர்கள் வெட்டியதில்,  முருகனின் 3 விரல்கள் துண்டானது. மற்ற மீன்வர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஜிபிஎஸ் கருவி மற்றும் வலை, மீன்கள் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றனர்.

இதுவரை இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது