புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:56 IST)

சரியா ரோடு கூட போட்டு தரல..! அமைச்சர் கடம்பூர் ராஜூவை வழி மறித்த மக்கள்!

கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவை பொதுமக்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். இதற்காக கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று கதிரேசன் கோவில் மலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார்.

ஆனால் அப்பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், சரியான சாலைகள் கூட அமைத்து தரவில்லை என்றும் பொதுமக்கள் நேரடியாக அமைச்சர் கடம்பூர் ராஜூவை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் விளக்கமளித்தும் மக்கள் வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது.