1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:15 IST)

அண்ணா சிலைக்கு தீ வைத்த விவகாரம்; அமைதியை குலைக்க முயல்வதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

அண்ணா சிலைக்கு தீ வைத்த விவகாரம்; அமைதியை குலைக்க முயல்வதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சியில் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாதவச்சேரியில் உள்ள அண்ணா சிலையை மர்ம நபர்கள் கொளுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைத்த விஷமிகளை, போலீசார் விரைந்து கண்டறிந்து அவர்கள் தகுந்த தண்டனை பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

மேலும் “தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மக்கள் மத்தியில் நிலவி வரும் அமைதியை சீர்குலைத்திடும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் போலீசார் தீர விசாரித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என கேட்டுக் கொண்டுள்ளார்.