திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:37 IST)

திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.! ஊழல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி..! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!!.

l murugan
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடி பொதிகை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய சேனலாக பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். 
 
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திமுக எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதாகவும் இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டு கால கனவு எண்ணம் தியாகங்கள் எல்லாம் நிறைவேறி ஒவ்வொரு இந்திய பிரஜையும் பாரத தேசத்தினரும் எதிர்பார்க்கின்ற திருவிழாவை கொண்டாடை தயாராக இருப்பதாக எல்.முருகன் தெரிவித்தார். ஆனால் திமுகவினர் இன்னும் பிற்போக்கு தனத்துடன் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.

 
தமிழகத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சி என்ற இருள் விலக வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்