1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK's fake veil has been torn Vanathi Srinivasan

திமுகவினரின் போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது- வானதி சீனிவாசன்

Chennai
திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில்  வேலை செய்து வந்த ரேகா என்ற  இளம்பெண்ணை,  ஆண்டோவும், அவரது மனைவியும் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்திய நிலையில், SC. ST  வன்கொடுமை  சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில்  வேலை செய்து வந்த ரேகா என்ற  இளம்பெண்ணை,  ஆண்டோவும், அவரது மனைவியும் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் போலீஸார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீலாங்கரை மகளிர் போலீஸார் SC. ST  வன்கொடுமை  சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நியையில்,  எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை  கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:

‘’திமுக ஆட்சிக்கு வந்த பின், பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற் போல் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தனது வீட்டில் வேலை செய்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த 18 வயது பெண்ணை சிகரெட்டால் சூடு வைத்தும் அடித்தும் கொடுமைபடுத்திய செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

மேலும் தனது படிப்பிற்காக வேலை செய்த பெண்ணிற்கு ஊதியமும் சரியாக வழங்கப்படவில்லை. தமிழக காவல்துறை விரைவாக விசாரணை மேற்கொண்டு , குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.கவினரின் வீட்டில் வேலை செய்யும் பட்டியலின சமூகத்தினருக்கே பாதுகாப்பு இல்லை. பட்டியல் சமூகத்தினரின் உண்மையான பாதுகாவலர்கள் திமுகவினர் தான் எனும் போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
அரசு பங்களாவில் இருந்து உடனே வெளியேற வேண்டும்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட மஹுவாவுக்கு உத்தரவு..!