ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:03 IST)

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
கடந்த சில மாதங்களாக கன மழை பெரு வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. 
 
இந்த விடுமுறையை சரிக்கட்டும் விதமாக  சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது. அந்த வகையில் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
எனவே நாளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் இன்றி இனிவரும் வாரங்களிலும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran