செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (11:33 IST)

சுசி லீக்ஸ் பொய்யின்னா, அப்ப நீங்க சொல்வதும் பொய்யா? சின்மயியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சுசி லீக்ஸை பொய் அதில் ஆதாரம் இல்லை என்று சொன்ன சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டை ஆதாரமின்றி எப்படி நம்புவது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
கடந்த சில நாட்களாக  பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். வைரமுத்து இதற்கு மறுப்பு தெரிவித்தும் சின்மயி விடாமல் வைரமுத்துவை ஒரு பொய்யர் என்றும் அவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் எனவும் கூறி வந்தார்.


இந்நிலையில் சுசி லீக்ஸில் சின்மயிக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்ததாக வந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த சின்மயி சுசிலீக்ஸில் இந்த விஷயம் வந்தபோது அப்போதே இந்த குற்றச்சாட்டை நான் மறுத்திருந்தேன். அதுமட்டுமின்றி சுசித்ரா கூறிய இந்த விஷயத்தில் உண்மையில்லை என்றும் அவர் மனநிலை சரியில்லாத நேரத்தில் வெளியிட்ட வீடியோவில் ஆதாரம் இல்லை என்றும் கூறினார்.
 
 
 
சுசி லீக்ஸ் ஆதாரமற்ற புகார் என்றும் அவர் மனநலம் பாதித்திருந்த போது இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறும் சின்மயி, அவர் வைரமுத்து மீது வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டை எப்படி நம்புவது என்றும் அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.