1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chinmayi confirm cant take actions against vairamuthu

வழக்கறிஞர்கள் கை விரித்து விட்டார்கள் - சின்மயி வேதனை

Chinmayi
வைரமுத்து மீதான பாலியல் புகார்கள் குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது என சின்மயி கூறியுள்ளார்.

 
வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், தான் நிரபராதி என நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பதாகவும், தன் மீது வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன் என கவிஞர் வைரமுத்துவும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சின்மயி “இதுபற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியாது என கூறிவிட்டனர்” என தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
100 ஜிபி போனஸ் டேட்டா: ஏர்டெல் தேங்க்ஸ் ஆஃபர்!