செவ்வாய், 4 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (13:40 IST)

புதிய வேகவரம்பை மீறும் வாகனங்களுக்கு அபராதம் அறிவிப்பு

நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வரவுள்ள நிலையில், இதற்காக அபராதம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தலை நகராக சென்னை விளங்குகிறது. சென்னை பெரு நகர போக்குவரத்து காவல்துறை ஒரு முக்கிய அறிவிப்பை  நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி. வரும்  நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருவதாக அறிவித்தது.

அதில், 'இலகுரக வாகனங்கள் 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வகனங்கள் 50 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும்,  குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கிமீ வேகத்தில்  மட்டுமே செல்ல வேண்டும்' என்று தெரிவித்தது.

இந்த நிலையில், சென்னையில் அமல்படுத்தப்படும் புதிய வேக வரம்பை மீறும் வாகனங்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட இலகுரக வாகனம் ரூ.1000, கனரக வாகனம் ரூ.2000 என அபராதம் விதிக்கப்படும் எனவும், ஏ.என்.பி.ஆர் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.