வங்கக்கடலில் காற்றழுத்த பகுதி?. இடி, மின்னலோடு கனமழைக்கு வாய்ப்பு..!
வங்க கடலில் மிகப்பெரிய காற்றழுத்த தாழ்வு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாலும், அடுத்த ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் கன்னியாகுமரியை தவிர மற்ற மாவட்டங்களில் சரியான மழை பெய்யாத நிலையில் நவம்பரில் நேற்று முதல் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
குறிப்பாக தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதேபோல் இன்றும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உட்பட வடக்கு கடலோர பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் இப்போதைக்கு பெரிய காற்றழுத்த தாழ்வு பகுதி இல்லை என்றாலும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார்
Edited by Siva