புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (12:34 IST)

ராஜன் செல்லப்பா பேசியது ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச் – கிளம்பியது அடுத்த சர்ச்சை !

சமீபத்தில் மதுரை வடக்கு எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கூறியது ஒபிஎஸ் சொல்லிப் பேசப்பட்டது என அமமுக தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

அதிமுக மதுரை வடக்கு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான  மதுரை ராஜன் செல்லப்பா இரு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவின் தோல்வி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் ‘அதிமுகவுக்கு ஒரேத் தலைமை தேவை. தொண்டர்களுக்கு யார் கையில் அதிகாரம் உள்ளது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா போல் கழகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். எனவே அதிமுகவுக்கு பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும் என பொதுக்குழுவில் கோரிக்கை வைப்போம்’ எனக் கூறினார்.

இதனால் அதிமுகவுக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து அமமுக தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன் இன்று விளக்கமளித்துள்ளார். அதில் ‘இருவருமே சந்தர்ப்பத்திற்காக இணைந்தார்கள். எவ்வளவு நாளைக்குதான் அதை மறைத்து வைக்க முடியும். இப்போது வெளியே வந்துவிட்டது. ஓபிஎஸ் தான் ராஜன் செல்லப்பாவை வைத்து இப்படி பேசுகிறார். ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கூட இல்லை.’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.