புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (07:59 IST)

அதிமுகவை வழிநடத்தும் ஒரே ஒற்றைத்தலைவர் தினகரன் தான்: நமது எம்ஜிஆர் கட்டுரை

அதிமுகவை வழிநடத்தும் ஒரே ஒற்றைத்தலைவர் தினகரன் தான்: நமது எம்ஜிஆர் கட்டுரை
மக்களவை தேர்தல் தோல்வி மற்றும் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தி ஆகியவைகளால் அதிமுகவில் கடந்த சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஒரு நபரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குரல்கள் வலுத்து வருகிறது. இதனால் இரட்டை தலைமையில் இருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஒற்றைத் தலைமையாக இருந்து அதிமுகவை வழிநடத்தும் ஆற்றல் டிடிவி தினகரனுக்குதான் இருக்கிறது என்றும், அதிமுகவின் உண்மை தொண்டர்கள் விழித்துவிட்டார்கள், இனி துரோகிகளை அவர்கள் நம்பி கழகத்தை காவுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் 'நமது எம்ஜிஆர் நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது
 
அதிமுகவை வழிநடத்தும் ஒரே ஒற்றைத்தலைவர் தினகரன் தான்: நமது எம்ஜிஆர் கட்டுரை
தர்மயுத்தம் எல்லாம் எதற்கு நடத்தினார்கள் என்ற போலி வேடதாரிகளின் வேஷம் உண்மையான தொண்டர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், கழக்த்தை சின்னாபின்னாமாக்க துடித்த கருங்காலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தியாகத்தலைவிக்கு துரோகம் விளைவித்தன் பயனை உணர தொடங்கியிருக்கின்றார்கள் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் தனியொரு ஆளாக தேர்தல் களம் கண்ட டிடிவி தினகரன் தலைமையே சிறந்தது என்பதை உண்மை தொண்டர்கள் உணரத்தொடங்கிவிட்டதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது