செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (07:46 IST)

தருமபுரியில் தடம் புரண்ட பயணிகள் ரயில்: 1850 பயணிகள் அவதி!

தருமபுரியில் தடம் புரண்ட பயணிகள் ரயில்: 1850 பயணிகள் அவதி!
தர்மபுரியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் அந்த ரயிலில் பயணம் செய்த 1850 பயணிகள் அவர்கள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கனமழை காரணமாக தர்மபுரி - முத்தம்பட்டி என்ற பகுதி அருகே மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இதன் காரணமாக கன்னூர் - யஷ்வந்த்பூர் இடையே பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டது
 
இந்த நிலையில் தடம்புரண்ட ரயில் வந்த 1850 பயணிகள் உடனடியாக பேருந்தில் ஏற்றப்பட்டு தர்மபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தர்மபுரியில் தடம்புரண்ட ரயில் மீண்டும் மீட்பதற்கான பணிகளை ரயில்வே துறை அதிகாரிகள் செய்து வருவதாகவும் இந்த பகுதிகள் மீண்டும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது