1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai electric train important announcement

கனமழை எதிரொலி: நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

கனமழை
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேலும் சில நாட்களுக்கு கனமழை இருப்பதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை அதாவது நவம்பர் 11ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மின்சார சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன்படி நாளை ஞாயிறு அட்டவணையின்படி சென்னையில் உள்ள மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
கனமழையில் மூழ்கிய 500 ஏக்கர் பயிர்கள்: விவசாயிகள் வேதனை!