ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (19:42 IST)

சென்னையில் மின்சார ரயில்கள் இயங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு!

சென்னையில் மின்சார ரயில் இயங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மின்சார ரயில்களை இயங்குவது தாமதம் ஏற்பட்டது என்பதும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் வார நாட்கள் கால அட்டவணைப்படி இயங்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை வழக்கம் போல் வார நாட்கள் கால அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு காரணமாக மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை முதல் மின்சார ரயில்கள் எப்பொழுதும் போல் வழக்கமான நிலையில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது