திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 28 ஜூலை 2018 (20:33 IST)

கருணாநிதி பற்றி தவறாக பதிவிட வேண்டாம்; சீமான் கட்சியினருக்கு அறிவுரை

திமுக தலைவர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 
திமுக தலைவர் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக மோசமாக உள்ள நிலையில் நேற்று இரவு அவரது வீட்டில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையில் தேர்ச்சி உள்ளதாகவும் விரைவில் இயல்பு திரும்புவார் என்று காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்தியாவில் அனைத்து மூத்த தலைவர்களும் சென்னை கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அதிமுக அரசியல் தலைவர்களும் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
 
கருணாநிதி உடல்நிலை சிலர் சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் தவறாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
கருணாநிதி உடல்நிலை குறித்து யாரும் தவறாக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.