வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 28 ஜூலை 2018 (19:23 IST)

பரவும் வதந்திகளாலேயே கருணாநிதிக்கு நீண்ட ஆயுள்: இல. கணேசன் பேட்டி!

வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.  
இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவும் வசந்திகள் பற்றி பாஜக எம்பி இல.கணேசன் அவரது பின்வருமாறு பேட்டியளித்தார். 
 
சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியால் கருணாநிதிக்கு தீர்க்க ஆயுள் உண்டு. குழந்தைகள் கடத்தல், தலைவர்கள் பற்றி தவறான கருத்துகளை பகிர சில கூட்டமே செயல்பட்டு வருகிறது.
 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாநிதி பூரண குணமடைந்து மீண்டும் மக்களை சந்திக்க வேண்டி பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.