ஐசியு பிரிவில் கருணாநிதி: காவேரி மருத்துவமனை அறிக்கை!

Last Updated: சனி, 28 ஜூலை 2018 (20:18 IST)
வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.  
இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இதற்கு முன்னர் தொண்டர்கள் பதற்றத்தை தடுக்க காவிரி மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை நள்ளிரவில் வெளியானது. அதில் ரத்த அழுத்தம் சீர் செய்யப்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
சிறிது நேரத்திற்கு முன்னர் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு அவரை காண சென்ற நிலையில் பரபரப்பு கூடியது எனவே, தற்போது ஒரு அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. 
 
அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும். அவரது உடல்நிலை சீராக உள்ளதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ஐசியு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :