தொடர்புடைய செய்திகள்
- மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?
- நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?
- செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!
- செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!
- தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!
இத பண்ணா நீங்கதான் நிரந்த முதலமைச்சர்!.. உதயநிதிக்கு பார்த்திபன் கொடுத்த ஐடியா!...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி கல்லூரி படிப்புக்கு பின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்களை தயாரித்து வந்தார் விஜய், சூர்யா ஆகியோரை வைத்துக் கூட இவர் படங்களை தயாரித்திருக்கிறார். தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் புதிய திரைப்படங்களை வாங்கி வெளியிடும் வியாபாரத்தையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை இந்நிறுவனம்தான் வெளியிட்டு வருகிறது.
ஒருகட்டத்தில் உதயநிதி சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒரு கல் ஒரு கண்ணாடி பட மூலம் அறிமுகமானவர் அதன்பின் நான்கைந்து படங்களில் நடித்தார். அதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் தீவிர அரசியலில் செயல்பட துவங்கிய உதயநிதி அடுத்த 3 வருடங்களுக்கு சினிமாவில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய பார்த்திபன் மு.க.ஸ்டாலின் எப்போதும் எங்க அப்பா பேசுவது போல புத்திசாலித்தனமாக என்னால் பேச முடியாது என்று சொல்வார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் பேசுவதில் நிறைய புத்திசாலித்தனம் இருக்கிறது. இதை பார்த்து நான் ஒருமுறை அவரிடம் உங்க தாத்தா மாதிரியே சில விஷயங்கள் பண்றீங்க.. அதுல கொஞ்சம் எம்ஜிஆரையும் சேர்த்துக்கிட்டீங்கன்னா கடைசி வரைக்கும் நீங் தான் முதலவர் என சொன்னேன் என கூறினார்.
உதயநிதியுடன் இணைந்து பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் பார்த்திபன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
