அவசரப்பட்டு என்.டி.ஏவுக்குள் போக வேண்டாம்.. இப்போதைக்கு நாம தான் 2வது இடம்.. விஜய்க்கு அறிவுரை கூறினாரா ஜான் ஆரோக்கியசாமி?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் அவசரப்பட்டு எந்த கூட்டணியிலும் இணைய வேண்டாம் என்றும், தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்றும் அவர் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக த.வெ.க-வே இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், அதிமுக மூன்றாவதாக தள்ளப்பட்டுவிட்டதாகவும் ஜான் சுட்டிக்காட்டியுள்ளார்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்றும், அது அரசியல் தற்கொலைக்கு சமம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
2026 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 20 சதவீத வாக்குவங்கியை பிடித்தால், அதுவே விஜய்யை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும் என்பது அவரது கணிப்பு. இந்த ஆலோசனைகளால் விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva