தொடர்புடைய செய்திகள்
- சிங்கம், சிறுத்தை இடையே அண்ணாமலை மாட்டிக் கொண்டார்: செல்லூர் ராஜூ
- தமிழகம் வளர்ச்சி பெறாததற்கு திமுக அதிமுகவின் ஊழலே காரணம்..! அமித் ஷா காட்டம்...!!
- மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 400 தொகுதிகளில் வெற்றி.. இந்தியா டிவி கருத்துக்கணிப்பு..!
- பாஜக -3, பாமக -1: இந்தியா டிவியின் கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!
- ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் உண்மையிலேயே போட்டியிடுகிறாரா? கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட்?
40 தொகுதிகளில் திமுக, பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? அதிமுகவுக்கு 0 என கருத்துக்கணிப்பு..!
தமிழகத்தில் நாளை மறுநாள் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
இந்த நிலையில் இறுதி கட்ட கருத்துக்கணிப்பு குறித்த தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வரும் நிலையில் தந்தி டிவி எடுத்த கருத்துக்கணிப்பில் 40 தொகுதிகளில் எந்தெந்த கூட்டணிக்கு எவ்வளவு இடம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்றும் மீதமுள்ள ஐந்து தொகுதிகள் இழுபறியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட இல்லை என்று ஜீரோ என குறிப்பிட்டுள்ளது தான் அதிமுக கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாஜக கூட்டணிக்கு கிடைத்த ஒரு தொகுதி கூட புதுச்சேரி என்று குறிப்பிட்டுள்ள தந்தி டிவி இழுபறியாக இருக்கும் ஐந்து தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை இழுபறி தொகுதிகள் பாஜகவுக்கு கிடைத்தால் திமுக 34 பாஜக , பாஜக 6, அதிமுக 0 என்ற நிலை தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் இனி தமிழக அரசியல் களம் திமுக மற்றும் பாஜக என்பதை நோக்கி நகர்வதாக இந்த தேர்தலில் முடிவு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva
