வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (10:48 IST)

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் உண்மையிலேயே போட்டியிடுகிறாரா? கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட்?

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியான நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த ஓபிஎஸ் அணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியில் அவருடைய மகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அவர் ஒரு அமைப்பை நடத்திவரும் நிலையில் ஓபிஎஸ், பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறிவிட்ட நிலையில் அவர் சுயேட்சையாக தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென ஓபிஎஸ் அணிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி நேரத்தில் திடீரென பிரதமர் மோடி அங்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது ஓபிஎஸ் தனது தொகுதியை விட்டுக் கொடுப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது நடந்தால் இந்த தேர்தல் பெரிய ட்விஸ்ட்டாக இருக்கும்
 
Edited by Siva