திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (09:48 IST)

பள்ளிக்கு செல்லும் 1-8 வகுப்பு மாணவர்கள்?

சென்னையில் சில தனியார் பள்ளிகள் தற்போதே பள்ளிகளை திறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 1 ம் தேதி முதலாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் சென்னையில் சில தனியார் பள்ளிகள் தற்போதே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை பள்ளிகளுக்கு வரவைப்பதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நலச் சங்கம் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. 
 
1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாஸ்க் கூட அணிய தெரியாது. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்ட பெற்றோர்கள் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவர்களோடு இருக்கலாம். மாணவர்களுக்கு மாஸ்க் அணிய சிரமமாக இருந்தால்,  மூச்சுவிட சிரமப்பட்டால் அவர்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை நேரயாக நடத்துவதற்கு தமிழக அரசு முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.