மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில் இட ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களிடம் கல்வி கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்களை பெற்றால், பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கட்டணங்கள் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்தன
இதனை அடுத்து தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர் லட்சுமி பிரியா அவர்கள் விடுத்த எச்சரிக்கை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பொறியியல் கல்லூரிகளும் தொழில் நுட்ப இயக்கத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் அவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது