வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (11:05 IST)

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்தது: 500 வீடுகளில் சூழ்ந்த வெள்ளம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள்மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது.



 
 
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன்னர் வந்த செய்தியின்படி பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள சுமார் 500 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் முக்கிய உடைமைகளை கையில் எடுத்து கொண்டு பாதுகாப்பை இடத்தை தேடி செல்கின்றனர்.
 
இந்த நிலையில் ஏரி உடைந்துள்ள பகுதியை உடனடியாக சீர் செய்யவும், அந்த பகுதியில் திண்டாடி வரும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும் உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.